உலக அளவில் பல்வேறு சமூக வலைதளங்கள் இருந்தாலும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது நிகழ்ச்சிகள், அறிக்கைகள், பேச்சு, பேட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் எக்ஸ்- வலைதளத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அதாவது 2009 ஆம் ஆண்டு அவர் ட்விட்டரில் (தற்போதைய எக்ஸ்) கணக்கை தொடங்கினார்.
தற்போது எக்ஸ் பக்கத்தில் உலக அளவில் அதிக நபர்கள் (ஃபாலோயர்கள்) பின்தொடரும் நபராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்து இருக்கிறார். தற்போதைய நிலையில் அவரை சுமார் 100.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 38.1 மில்லியன் பேரும் துருக்கி அதிபர் எர்டோகனை 21.5 மில்லியன் பேரும், ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமதுவை 11.2 மில்லியன் பேரும் , மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவலை 10.9 மில்லியன் பேரும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை .6.5 மில்லியன் பேரும் இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியை 2.4 மில்லியன் பேரும் பாலோ செய்கின்றனர்.
அந்த வகையில் உலக அளவில் அதிக அதிக பாலோயர்களை கொண்ட தலைவராக உருவெடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவைப் பொறுத்தவரை ராகுல் காந்தியை 26.4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
பிரதமர் மோடியை ஒப்பிடுகையில் இவரைத் தொடர்பவர்கள் நான்கில் ஒரு பங்கு தான். அதற்கு அடுத்தபடியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரை பின்தொடர்கின்றனர்.
இந்த நிலையில் தனது நிறுவனமான எக்ஸ் பக்கத்தில் அதிக பேர் பின்தொடரும் உலகத் தலைவரான பிரதமர் மோடிக்கு அந்நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”வாழ்த்துக்கள்! பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர் என்பதில் மகிழ்ச்சி!!” என கூறியுள்ளார்.
உலகத் தலைவர்களில் சிகரம் தொட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இதுவும் இந்தியாவைப் பெருமைப்பட வைக்கும் பெரும் சாதனை தான்.
வாழ்த்துகள்!