கோவை சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 8வது ஆண்டு ஸ்கேட்டிங் போட்டி சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி யில் ஜூலை 20, 2024 அன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இதில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 பள்ளிகளைச் சேர்ந்த திறமையான ஸ்கேட்டிங் வீரர்கள் தங்கள் திறமையையும் கலைத்திறனையும் வெளிப்படுத்தினர், நடுவர் குழுவால் போட்டி நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடத்தப்பட்டது.
கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியும், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியும் முறையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவின் சுழற்கோப்பைகளை வென்றனர்.
மேலும் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த கோப்பையை வென்றது. பெற்றோர்கள், ஆசிரியர் கள், பயிற்சியாளர்கள் மற்றும் சக மாணவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.