பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் மாணவர் மன்றம் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பொன்விழா அரங்கில் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஷ் வரி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தலைவர் டாக்டர் நந்தினி வரவேற்புரையாற்றினார். 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற பொறுப் பாளர்களுக்கு முதல்வர் ஹாரத்தி உறுதி மொழி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பவானீஷ்வரி கூறியதாவது: பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது இன்றியமையாதது. தொடர்ச்சியான முயற்சியும் கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தொழில் ஆலோசகரும் ஆய்வாளருமான ஜெயபிரகாஷ் காந்தி சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, கல்லூரியின் மாணவர் மன்றத்தின் தலைவர் மிருதுபாஷினி நன்றியுரை வழங்கினார்.