fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மேலிடப் பார்வையாளர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மேலிடப் பார்வையாளர் ஆலோசனை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க மேலிடப் பார்வையாளர்களை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளர் எம்.நாராயணசாமி திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு (எஸ்.சி) துறை மாவட்ட தலைவர் கே.குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் வி.எஸ்.க.மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநகர தலைவர் என்.வெற்றிசெல்வன் அனைவரையும் வரவேற்றார்.

ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக மாவட்ட மேலிட பார்வையாளர் எம்.நாராயணசாமி பேசியதாவது: முன்பெல்லாம் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து அவர்கள் பெயரை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பிவைப்பார்கள். அந்த பெயரை டெல்லியிருந்து மாவட்ட தலைவராக அறிவிப்பார்கள்.

அந்த முறை தற்போது கிடையாது தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிடப்பார்வை யாளர்களை நியமித்து அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு சென்று அங்கு காங்கிரஸ் கட்சியினரை நேரில் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 நாட்கள் இருந்து கருத்துக்களை கேட்கவுள்ளேன். இங்கு பெறும் தகவல்களை டெல்லி மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளது. அங்குதான் மாவட்ட தலைவர் யாரை தேர்வு செய்யலாம் என முடிவெடுக்கப்படும். இந்த பணி டிசம்பர் 5ந்தேதிக்குள் முடித்து 8ந்தேதிக்குள் அறிக்கை டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் (எஸ்.சி பிரிவு) பார்சல் முனுசாமி, மாநில செயலாளர் (எஸ்.சி பிரிவு) காண்டீபன், மாவட்ட பொதுச்செயலாளர் இளைஞர் காங்கிரஸ் பிரகாசம், வழக்கறிஞர் அணி பாபு, மகளிர் அணி மலர்க்கொடி, ஜீவா, பஞ்சாயத்து ராஜ் சங்கம் ராஜீவ்காந்தி, மாவட்ட பொறுப்பாளர்கள் பாஸ்கரன், சிவாஜி, வட்டார தலைவர்கள் தண்டராம்பட்டு மணி, விஸ்வநாதன், மாநில மாவட்ட வட்டார மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் (எஸ்.சி. பிரிவு)மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img