fbpx
Homeபிற செய்திகள்கொங்கு சகோதயா மாநில யோகா போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி சாம்பியன்

கொங்கு சகோதயா மாநில யோகா போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி சாம்பியன்

மாநில அளவிலான கொங்கு சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற யோகா போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி தொடர்ந்து 4-வது ஆண்டாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

அண்மையில் துறையூரில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள் 10 வகையான பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் திகழினி, முகிலினியன், கிஷோர் கிருஷ்ணா, யாழினி, பிரஜித், லக்சனா, தன்யாஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கமும், சபரிநாதன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இப்போட்டியில் பரணி வித்யா லயா மாணவர்கள் மொத்தமாக 7 தங்கப்பதக்கத்தையும், 1 வெண்கல பதக்கத்தையும் வென்று புள்ளிகளின் அடிப்படையில் நான்காவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

தொடர்ந்து 4-வது முறையாக கொங்கு சகோதயா மாநில அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, யோகா பயிற்சியாளர்கள் உமா மகேஸ்வரி, வினோதினி, சாதனை படைத்த யோகா மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணாக்கர்களை வாழ்த்தி பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img