fbpx
Homeதலையங்கம்பொய் செய்தியை கண்டறியபுதிய வாட்ஸ்அப் சேனல்!

பொய் செய்தியை கண்டறியபுதிய வாட்ஸ்அப் சேனல்!

சமூக ஊடகங்கள் அதிகரித்த பிறகு உண்மை செய்திகளை காட்டிலும் போலி செய்திகள் அதிகம் வைரலாகி வருகிறது.

இதனால் இணையங்களில் வைரலாகும் செய்திகளில் எது உண்மை? எது பொய் என்பதை அறிந்து கொள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்; குழம்பிப் போய் விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மோடி பொய் சொல்கிறார், அமித்ஷா பொய் சொல்கிறார் என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அண்மையில் கூட தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தவறான தகவலை வெளியிட்டார்.

இதற்கு தமிழ்நாடு அரசின் TN Fact Check ஆதாரங்களுடன் அண்ணாமலை சொன்னது பொய் என்பதை அம்பலப்படுத்தியது. இப்படி TN Fact Check செய்திகளின் உண்மைத் தன்மைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் நிலையில், அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் செய்திகளின் உண்மைத் தன்மைகளை இன்னும் எளியமுறையில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கான கியூஆர் கோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தவுடன் புதிய வாட்ஸ்அப் சேனல் தங்களது வாட்ஸ்அப்பில் இணைந்துவிடும். இந்த சேனலில் போலியாக பரப்பப்படும் செய்திகளின் உண்மை என்ன என்பது இடம் பெறும்.

இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம் எது உண்மைச் செய்தி? எது பொய்ச்செய்தி-? என்பதை மக்கள் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது!

படிக்க வேண்டும்

spot_img