fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதிப் பேரணி

கோவையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைதிப் பேரணி

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையிலிருந்து காந்தி புரம் நகர பேருந்து வரை அமைச்சர் முத்துசாமி தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் நா.கார்த் திக் (முன்னாள் எம்எல்ஏ), தொஅ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்குள்ள அண்ணா சிலை அருகில் கலைஞரின் புகைப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, கலைஞரின் மறைவு என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்திய நாள் என வும் பல்வேறு கிராமங்களிலும் பஞ்சாயத்துகளிலும் கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி பொது மக்கள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

கலைஞர் மறைந்த போது சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகிலேயே கலைஞருக்கு நினைவிடம் அமைப் பதற்கு அரசின் சார்பில் அனுமதி கிடைக்கவில்லை என குறிப்பிட்ட அவர், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்த உடன் 10 மணி நேரத்திற்குள் அந்த இடம் கலை ஞருக்கு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவு போடப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது என்றார்.

இன்றைய தினம் கலைஞரின் நினைவு தினம் மட்டுமல்லாமல் அவர் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாரோ அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என முதல மைச்சர் எடுக்கின்ற அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் உறுதிமொழி எடுக் கின்ற காலமாக உள்ளது என தெரிவித்தார்.

கணியூரில் கலைஞரின் சிலை திறக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து விதமான அனுமதி களையும் உரிய முறையில் பெற்று அந்த சிலை நிறுவ பெற்றுள்ளது. ஒன்பதாம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதன் பிறகு அந்த சிலையை திறந்து வைக்க உள்ள தாக தெரிவித்தார்.

ஒன்பதாம் தேதி முதலமைச்சர் கோவை அரசு கலைக்கல்லூரியில் தவப்புதல்வன் நிகழ்ச்சியிலும் உக்கடம் பகுதியில் ஒரு பகுதி மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தொடர்ந்து கணியூரில் சிலையை திறந்து வைக்க உள்ளதாகவும் அங்கு கலைஞரின் சிலை மட்டுமல்லாமல் அதற்கு அடியில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img