தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னாள் எம்.பி. கௌதமசிகாமணி தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலாக சென்று மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக முன்னாள் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் தமிழக முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் முன்னாள் எம்பியும் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கௌதமசிகாமணி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அமைதி
ஊர்வலமானது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தொடங்கி கலைஞர் அறிவாலயத்தில் நிறைவு பெற்றது.
அமைதி பேரணியின் இறுதியாக கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அமைதி செலுத்திய பின் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
உடன் விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ அன்னியூர் சிவா புஷ்பராஜ் ஜனகராஜ் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு சர்க்கரை மணிகண்டன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்