fbpx
Homeபிற செய்திகள்மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் அருண் வெற்றி

மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் அருண் வெற்றி

மண்டல அளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கிடையேயான குத்துச்சண்டைப் போட்டி, செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் 25.07.2025 முதல் 27.07.2025 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைச் சார்ந்த 3000க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 69 – 75 கிலோ எடை பிரிவில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த 12ம் வகுப்பு மாணவர் அருண் சிறப்பாகப் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவனையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img