பில்ட் டெக் சிவில் இன்ஜினியர்ஸ் & கான்ட்ராக்ட்ஸ் நிறுவனம் சார்பில், பில்ட் டெக் மைதானத்தில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட (U-14) முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடர் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த களமாக அமைந்தது.
இத்தொடரில், பில்ட் டெக் அகாடமி, மருதம் அகாடமி, கிரேஸ் 11ஸ் அகாடமி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்று விறு விறுப்பான போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தின.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில்ட் டெக் அகாடமி, அனைத்து போட்டிகளிலும் சிறப் பாக செயல்பட்டு U -14 முத்தரப்பு கிரிக் கெட் தொடரின் சாம் பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.
தனிநபர் விருதுகளில், கிரேஸ் 11ஸ் அகாடமியைச் சேர்ந்த சம்யுக்தா, இரண்டு போட்டிகளில் 106 ரன்கள் குவித்து சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்றார். அதே அணியைச் சேர்ந்த ஜிஷ்ணு சின்ஹாக், 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளர் விருதைப் பெற்றார்.
இத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த பில்ட் டெக் சிவில் இன்ஜினியர்ஸ் – கான்ட்ராக்ட்ஸ் நிறுவனம், எதிர்காலத்திலும் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த உறுதி பூண்டுள்ளது.



