fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தக வெளியீட்டு விழா இன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்கை நிறுவனங்களின் தலைவர் ஸ்கை வி.சுந்தரராஜ் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஞான அவதாரம் என்ற கருப்பொருளில் முதன்முறையாக படைப்புகளை வெளியிட்ட 28 எழுத்தாளர்களின் 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இந்த சாதனையை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது. மேலும், முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள் உள்ளிட்ட மொத்தம் 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இதற்காக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதை கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மற்றும் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் டாக்டர் கவிதாசன் தன்னம்பிக்கை உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img