சக்தி தகவல் மற்றும் மேலாண்மையியல் கல்வி நிறுவனம் (SIIMS), பல்ல டம் விவசாயிகள் ஒழுங்கு முறை குழு (PFRC) இணைந்து “ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப் பண்ணை கண்காட்சி – 2026” ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி வளாகத்தில் நடத் துகிறது.
இந்த நிகழ்வின் முக் கிய நோக்கம் தொழில்முனை வோரை உருவாக்குதல், நவீன கோழிப்பண்ணை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் வேளாண்மை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறு வனங்களை ஊக்குவிப்ப தாகும். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம் மற்றும் சுற்றுவட் டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் கோழிப்பண்ணைத் துறையினருக்கு பயனளிக் கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இதில் முன்னணி தீவன உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள், கால்நடை மருத்துவ சேவை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற் றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள் பங்கேற் கின்றன.
இக்கண்காட்சியில் 40 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன கோழிப்பண் ணை தொழில் நுட்பம், தானியக்க முறை, கழிவு மேலாண்மை, உயிர் பாதுகாப்பு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கோழி தயாரிப்புகள் உள் ளிட்ட புதிய கண்டு பிடிப்புகளும் அறிமுகப்ப டுத்தப்படுகின்றன.
கண்காட்சியுடன் இணைந்து, சிறப்பு நிபுணர்களின் உரைகள், கலந்துரையாடல் அமர் வுகள், வாங்குபவர்-விற்ப னையாளர் சந்திப்பு உள் ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
கண்காட்சி அரங்ககளை SIIMC தலைவர் மற்றும் ரிசிஜி தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ண ராஜ் வானவராயர் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் PFRC தலைவர் மற்றும் சாந்தி ஃபீட்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.லட்சுமணன், PFRCசெயலாளர் மற்றும் சுவாதி ஹேட்சரீஸ் நிர்வாக இயக்குநர் கே. சின்னசாமி மற்றும் பல்லடம் விவசாயிகள், ஒழுங்குமுறை குழுவின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வை PFRC சார்பில் ரொட்டேரியன் ராம்ஜி ராகவன் மற்றும் SIIMS சார்பில் டாக்டர் ஆர். தியாகு ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.



