திருப்பூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணாக்கர்களுக்கு 17வது ஆண்டாக மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. மாணவிகள் பிரிவு போட்டியை, திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அலுவலர் ரகு குமார், மாவட்ட வாலிபால் கழக செயலாளர் தங்கமணி, இணைச் செயலாளர் கிருஷ்ணன், தேசிய வாலிபால் வீரர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவிகள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் வித்ய விகாசினி பள்ளி முதலிடம், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், பூமலூர், அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாமிடம், திருமுருகன் பள்ளி நான்காமிடம் பெற்றது. மாணவிகள் ஓபன் பிரிவில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதில் வித்ய விகாசினி பள்ளி முதலிடம், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், திருமுருகன் பள்ளி மூன்றாமிடம், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி நான்காமிடம் பெற்றது. மாணவர்கள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 13 அணிகள் கலந்து கொண்டன. இதில் வித்ய விகாசினி பள்ளி முதலிடம், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மூன்றாமிடம், ஸ்ரீஅலகுமலை வித்யாலயா பள்ளி நான்காமிடம் பெற்றது. மாணவர்கள் ஓபன் பிரிவில் 15 அணிகள் கலந்து கொண்டன. இதில் வித்ய விகாசினி பள்ளி முதலிடம், உடுமலை, சைனிக் பள்ளி இரண்டாமிடம், அம்மா பாளையம், ஸ்ரீராம கிருஷ்ணா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி நான்காமிடம் பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



