ஈரோடு சுண்ணாம்பு ஒடை பகுதியில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 8 ஓடைகளில் தூர் வாரும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு தற்போது மக்களின் பாதுகாப்பு கருதி தூர்வாரும் பணி ஈரோடு பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெற உள் ளது. 30 கிலோமீட்டர் தொலைவு ஓடைகள் தூய்மைப்படுத்தப்படும். மழைக்காலத்தில் இதனால் நீர் தேங்காமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.
ஓடைகளை சுற்றி உள்ள தொழிற்சாலைகள் ஓடைகளில் கழிவுநீர் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். பெருந்துறை சிப்காட்டில் பழைய சுத்திகரிப்பு நிலை யம் மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கான சுத்திகரிப்பு நிலையமும் விரைவில் சரி செய்யப் படும்.
ஈரோடு மாநகராட்சியில் ஒரு பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. அதற்கானஆய்வு பணிகளும் நடைபெறும். ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 30 கோடியில் திட்டம் ஒன்றை முதல்வர் அறிவித்தார். அதற்கான திட்டம் உருவாக்கபட்டு வருகிறது. அசோகபுரம் பகுதியில் முந்தைய ஆட்சி யில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வெளிவரும் கழிவு நீரை சுத்திகரித்து நல்ல நீரை தொழிற்சாலையில் பயன் படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. திட்டம் நின்று போய் உள்ளது. அது குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும்.
மதுக்கடையில் இருந்து காலி பாட்டில்களை பெறும் திட்டம் ஒன்பது மாவட்டங்களில் அம லாக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நவம்பர்க்குள் அமலாக்க நடவடி க்கை எடுக்கப்படும். இதற்காக மதுகடை தொழிலாளர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் மது வகைகளை டெட்ரா பேக்கில் விநியோகம் செய்வதற்காகவும் உரிய ஆய்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் கமிஷனர் மானிஷ் முதன்மை பொறியாளர் விஜயகுமார் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.