கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட் டக்கலைத்துறை சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணி களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்தவர் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், “வடசேரி உழவர் சந்தையில் தோட் டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை மையத் தில், அரசு தோட்டக்கலை பண் ணைகள் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த செடிகள் மற்றும் பல்வேறு பொருட்களையும் பார்வையிட்டதோடு, இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பொதுமக்கள் அறிந் திடும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட் டுள்ளது.
உழவர் சந்தையில் தற்போது 65 கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கன்னியா குமரி வேளாண் விற்பனை குழு மூலம் குளிர்சாதன வசதியுடன் கூடிய பூக்கள் விற்பனை மையத் திட்டத்தினை பரவலாக்க அறிவு றுத்தப்பட்டது.
வடக்கு தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சன்ன இரக நெல்-கோ 55 நெல் ஆதார விதைகள் உற்பத்திப்பண்ணை பார்வை யிட்டதோடு, விதைப்பண்ணையில் உருவாக்கப்படும் நெல்களின் தரத் தினை எவ்வாறு கண்டறிவது என கேட்டறியப்பட்டது.
இராஜாக்கமங்கலம் வட்டாரத் திற்குட்பட்ட, பறக்கை பகுதியில் வேளாண்மை துறையில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் கீழ் நடப்பட்ட மர கன்றுகளையும், பி.எம்.கிசான் திட்டத்தில் 5% பயனாளிகள் சரிபார்த்தலையும் நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அரசு திட்டங்களை உரிய முறை யில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிட கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடைபெற்ற ஆய்வுகளில் வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், துணை இயக்குநர்கள் ஷீலா ஜான் (தோட்டக்கலை), வாணி (வேளாண்மை மத்திய திட்டம்), கீதா (வேளாண் வணிகம்), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், வேளாண்மை உதவி இயக்குனர் பொன்ராணி, துணை வேளாண்மை அலுவலர் சிவஜெயந்தி, உதவி செயற்பொறியாளர் லதா வேணு (வேளாண் பொறியியல்), உதவி வேளாண்மை அலுவலர் ராஜசேகர் ஆனந்த் மற்றும் முன் னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.