இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோகத் தளமான ‘ஸ்விகி’ 2023-ம் ஆண்டு நிறைவு விழாவை தமிழகத்தில் தங்கள் நிறுவன உணவு விநியோக ஊழியர்களுடன் கொண்டாடியது.
திருப்பூரில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ‘ஸ்விகி’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பாண்டிச்சேரி, நாகர்கோவில், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,திருப்பூர் ஆகிய நகரங்களில் சிறப்பாக உணவு விநியோக பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை திருப்பூருக்கு வரவழைத்து பாராட்டி, கௌரவித்தது.
உணவு விநியோகம், ‘ஸ்விகி இன்ஸ்டாமார்ட்’ மூலம் நுகர்வோருக்கு சிறப்பான சேவையாற்றிய சிறந்த விநியோக ஊழியர்கள் பாராட்டப்பட்டனர். இதில் மேற்கண்ட ஊர்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ‘ஸ்விகி’ தேசிய வர்த்தகத் தலைவர் சித்தார்த் பாகூ கூறுகையில், ‘எங்கள் வளர்ச்சியில் விநியோக ஊழியர்கள்தான் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பு கொண்டாடப்பட வேண்டியது.
அவர்களின் ஆதரவு காரணமாகவே பண்டிகை காலங்களில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடிந்தது. கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவோம்’’ என்றார்.