சென்னை, மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் ‘தியானம், புத்துணர்ச்சி மற்றும் உங்களை உங்களின் சுயதன்மையுடன் இணைத்தல்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ என்ற கல்விசார், தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ‘இதய நிறைவு தியான அமைப்பிலுள்ள’ முறையான பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் வழி நடத்தப்பட்டது.
தினமும் தியானம் செய்வதன் மூலம் அமைதியான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பெற முடியும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியான் மூலம் மாணவர்கள் அமைதியான மனநிலையைப் பெறுவதோடு, அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பயனுள்ளதாக அமையப்பெறும். ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.