fbpx
Homeபிற செய்திகள்மருத்துவ துறையை மேம்படுத்த புதிய முயற்சி இந்தியாவில் முதல் முறையாக கோவையில் ‘மெட் மால்’ திறப்பு

மருத்துவ துறையை மேம்படுத்த புதிய முயற்சி இந்தியாவில் முதல் முறையாக கோவையில் ‘மெட் மால்’ திறப்பு

மருத்துவ துறையை மேம்படுத்தும் முயற்சியாக, இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை கோவை, அவிநாசி சாலையில் பிரத்யேகமாக ‘மெட் மால்’ திறக்கப்பட்டுள்ளது.

‘மெட் மால்’ முயற்சியின் முக்கிய நோக்கம், குடிமக்களுக்கு சிறந்த, தரமான சிகிச்சைகளை அளிப்பதற்காக மருத்துவத் துறையை மேம்படுத்துவதாகும். இதற்காக, இந்த மால் பல்வேறு வகையான அனைத்து சிறப்பு மருத்துவ உபகரணங்களுடன் ஒரே தீர்வாக இருக்கும்.

தேசிய ஐ.எம்.ஏ. தலைவர் மருத்துவர் ஆர்.வி.அசோ கன், மாநில தலைவர் மருத்துவர் அபுல் ஹசன், டிஎன்எஸ்பி, இதர ஐ.எம்.ஏ உயரதிகாரிகள், கோவை மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் கே.ஜி மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஜி.பக்தவத் சலம், ‘மெட் மால்’ ஐ திறந்து வைத்தார்.

இங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு உபகரணங்கள், டயாலிசிஸ் கருவிகள், ஒப்பனை உப கரணங்கள், மருத்துவ மனை தளவாடங்கள், வீட்டுபராமரிப்பு பொருள்கள் உள்பட பல்வேறு கருவிகள், பொருட்கள் தரமாக கிடைக்கும். மேலும், உபகரணங்கள் விற்பனை மற்றும் வாடகை அடிப்படையிலும் வழங்கப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img