fbpx
Homeபிற செய்திகள்இலங்கையை வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்ற கோவை மாணவனுக்கு பாராட்டு விழா

இலங்கையை வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்ற கோவை மாணவனுக்கு பாராட்டு விழா

16 வயதுக்கு உட் பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற் கான தெற் காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி, இலங்கையில் நடைபெற்றது.

இதில் அந்நாட்டு அணியை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இதில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த ஆதவன் என்ற பள்ளி மாணவனும் இடம் பிடித்து விளையாடினார். கோவையிலிருந்து 16 வயதுக்கு உட்பட்ட இந்திய கூடைப் பந்து அணியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெரு மையை பெற்ற மாண வன் ஆதவனிற்கு,அவர் பயின்று வரும் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது.

சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாரா யணசாமி தலைமையில் நடைபெற்ற இதில், பள்ளியின் தலைவர் சுகுணா, மாண வன் ஆதவனின் பெற் றோர் குமரேசன் & ஜெய மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய மாணவன் ஆதவன், சுகுணா பிப் பள்ளியில் சிறுவயது முதலே பயின்று வருவ தாகவும், இரண்டாம் வகுப்பு பயிலும் போதே கூடைப்பந்து விளையாடி வருவதாக கூறிய அவர், கோவை மாவட்ட அணியில் கேப்டனாக இருந்து மாநில அளவில் முதலிடம் பிடித் துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய ஆண்கள் பிரிவு கூடைப்பந்து அணியில் விளையாடுவதே தமது இலட்சியம் என கூறிய அவர், இந்திய கூடைப்பந்து அணியில் சர்வதேச போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் வெல்லும் அணியில் தான் விளை யாடி வெற்றி பெறு வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகுணா பிப் பள்ளியின் சீனியர் முதல்வர் மார்ட் டின், முதல்வர் பூவணன், அகாடமிக் ஒருங்கிணைப்பாளர் ஷோபா, உடற்கல்வி இயக்குனர் ஆல்வின் பிரான்சிஸ் உட்பட ஆசிரிய, ஆசிரி யைகள், மாணவ-மாண விகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img