கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப் பின் சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கடந்த 30ந் தேதி துவங்கி நான்கு நாட்கள் கோவை சந் திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றன..
மாணவர்களுக்கான கால் பந்து போட்டியாக நடைபெற்ற இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களை உள்ள 64 சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் பள்ளிகளை சேர்ந்த 117 அணிகள் கலந்து கொண்டன.
14, 16, 19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுக ளாக நடைபெற்ற போட்டியில் 1872 மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகள் ஜி.ஆர்.ஜி. குழுமங்களின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி ஆலோசணையின் பேரில், சிவில் ஏரோட்ரோம், டெக்ஸ் பார்க் சாலையில் உள்ள சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் போட்டிகள் நடைபெற்றன.
விறுவிறுப்பாக நடை பெற்ற போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோருக் கான போட்டியில் முதல் இடத்தை திண்டுக்கல் பார்வதி அனுகிரஹா பள்ளி, இரண்டாவது இடத்தை கோவை சி.எஸ்.அகாடமி பள்ளி, மூன் றாவது இடத்தை அன்னூர் நவ பாரத் பள்ளி, நான்காவது இடத்தை பி.பி.எம்.குளோபல் பள்ளி அணிகள் பிடித்தன.
இதே போல 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், கோவை சி.எஸ்.அகாடமி முதலிடத்தையும், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்.இரண்டாம் இடத்தையும், கோவை எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளி மூன்றாவது இடத்தையும், திருப்பூர் வித்யாசாகர் நான்காவது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிகள் குறித்து சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கருணாம்பிகேஸ்வரி கூறுகையில், அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடியதாகவும் ,சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.