fbpx
Homeபிற செய்திகள்அருந்ததியர் சமூக மடத்தின் அறக்கட்டளை சார்பில் போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் செப்.23- ல்...

அருந்ததியர் சமூக மடத்தின் அறக்கட்டளை சார்பில் போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் செப்.23- ல் துவக்கம்

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள அருந்ததியர் சமூக மடத்தின் அறக் கட்டளை சார்பில் போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 23ம் தேதி துவக்கப்படும் என அறக்கட்டளையின் தலைவர் ஏ.சுந்தர் தெரிவித்தார்.

கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் சமுக அறக்கட்டளையின் சார்பில் செயற்குழு கூட்டம் அறக்கட்டளை தலைவர் சுந்தர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் அறக் கட்டளை துணைத் தலைவர் எஸ்.செல்வக் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

துணைச் செயலாளர் கோவை ரவிக்குமார், அறக் கட் டளை பொருளாளர் பழனிசாமி, அறங்காவலர் மாறன் ஆகியோர். முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஏழை, எளிய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அருந்ததியர் அறக்கட்டளைக்கு சொந்தமான மடத்தில் வருகின்ற செப்.23ம் தேதி துவக்க பட உள்ளது.

தகுதி வாய்ந்த மாணவ, மாண விகள் தேர்வு செய்வது மட்டுமன்றி அனைத்து பட்டியல் இன பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ, மாணவிகள் சேர்க்கவும், உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

மேலும், ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் அளிக்கும் வகையில் உள்ள திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு இக்கூட்டத்தில் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் அறங்காவலர் திருமலைசாமி நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை முன்னால் தலைவர் வெள்ளிங்கிரி, ஆலோசகர் கோல்டன் பொன்னு சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.பி நடராஜன், எம்.ரவிக்குமார், ரயில்வே மேகநாதன், ராமநாதன், சேவரத்னா சின்னசாமி, மருதாசலம், நாகராஜ் , சிற்பி பால்ராஜ், சிவக்குமார், அன்னுர் மருதாசலம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img