Homeபிற செய்திகள்பரிசலில் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

பரிசலில் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

சிறுமுகை லிங்காபுரத்தை அடுத்து காந்தவயல், மேலூர், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங் கள் உள்ளன. இந்த நிலையில் லிங்காபுரம் &- காந்தவயல் இடையே பழைய பாலத்தின் அருகிலேயே ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் ஏறத்தாழ 75% முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதே வேளை யில் புதிதாக கட்டப் பட்டு வரும் பாலத்தின் அருகிலேயே மக்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்துள்ள தால் இந்த சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.இத னால் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார்,செயல் அலுவலர் ரவிசங்கர் உள்ளிட்டோர் இங்கு நேரில் பார்வையிட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையின் நீர்த்தேக்கத்தை கடந்து சென்று வர பரிசல் இயக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது பவானி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முதல் பரிசல் இயக்கப் பட்டு வருகிறது. மாணவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்து பாதுகாப்பாக சென்று வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img