Homeபிற செய்திகள்ரூ.162.43 கோடியில் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.162.43 கோடியில் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு/ மயிலாடும் பாறை ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையேற்ற அரசு, க.விலக்கு அருகே வைகை அணை பகுதியில் குருவியம்மாள் புரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளது.

இதன் மூலமாக கடமலைக்குண்டு/ மயிலாடு ம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 104 கிராமம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சியில் 137 கிராமங்கள் மற்றும் தேனி ஊராட்சி ஒன்றித்தில் 2 ஊராட்சியில் 9 கிராமங்கள் என 250 ஊரக குடியிருப்பு பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 10.70 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று காலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சுத்தி கரிப்பு நிலையத்தில் குத்து விளக்கு ஏற்றி பார்வை யிட்டார்.
நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் , ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் போஸ்,தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, கடமலை/ மயிலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் முரளி மனோகர், நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் ராஜேஷ், ஊராட்சிகள் து.தலைவர் ராஜபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கபாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் தற்கால (2021) மக்கள் தொகையின் படி 1.40 லட்சம் மக்களுக்கு 7.90 மில்லியன் லிட்டர் இடைக்கால (2036) மக்கள் தொகையின் படி 1.58 லட்சம் மக்களுக்கு 9.30 மில்லியன் லிட்டர் மற்றும் உச்சகால (2051) மக்கள் தொகையின்படி 1.78 லட்சம் மக்களுக்கு 10.70 மில்லிங் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டு குடிநீர் திட்டத்திற்கான இயல்பு நீர் வைகை அணையின் கீழ் பகுதியில் மீட்பு சிற்ற ணையிலிருந்து மேல் பகுதியில் ஆறு மீட்டர் விட்டமுள்ள கிணறு மூலம் சேகரிக்கப்பட்டு உந்து குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு குருவியம்மாள்புரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள 10.70 மில்லியன் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும். அவ்வாறு சுத்திகரிக்க ப்பட்ட குடிநீர் 428.11 க.மீ. நீர் உண்டு குழாய் கள் மூலம்புதிதாக அமைக்கப் பட்டுள்ள 40 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் சேகரிக்கப்பட்டு ஏற்கனவே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 39 மேல்நிலை நீர் தொட்டிகள் மூலம் 24.50 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பகிர்மான குழாய்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும்
இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10.70 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக குடிநீர் வடிகால் துறையினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img