fbpx
Homeபிற செய்திகள்குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுடில்லியில் நடந்த குடியரசு தின அணிவ குப்பில் பங்கேற்ற கோவை ஸ்டேன்ஸ் பள்ளி என்சிசி மாணவர்கள் இருவருக்கு பாராட்டு விழா நடந்தது.

பாராட்டு விழா

ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஷானா கோலட், ஆல்வின் ஸ்மித் அப்பாதுரை ஆகியோர் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அங்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக பள்ளி சார்பாக அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர் யோகிதா ஆனந்த் என்சிசி பற்றி அறிமுகவுரையாற்றினார்.
பள்ளி முதல்வர் எஸ்.செலின் வினோதினி, கடுமையான உழைப்பினால் மாணவர்கள் இத்தகுதியையும், நற்பெயரையும் பெற்றதாக குறிப்பிட்டார்.

ஷானா கோலட், ஆல்வின் ஸ்மித் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விடா முயற்சியும், கடவுளின் ஆசியினாலும் மாணவர்கள் இச்சாதனையைப் புரிய நேர்ந்தது என துணை முதல்வர் டாக்டர் வி.தினகரன் கூறினார்.

கடந்த 1962-ம் ஆண்டு முதலே தலைநகரில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்து வரு கின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாதனை புரிந்த என்சிசி மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன. பள்ளியின் என்சிசி அதிகாரி ஜே.ஜேக்கப் கௌரவிக்கப்பட்டார்.
மாணவர் ஹன்னா மோனிகா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img