கோவை அருகே அரசூரில் உள்ள கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘ஃபீஸ்ட்டா 23’ என்ற தொழில்நுட்ப போட்டிகள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சிகள்
இதில் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள் 50-க்கும் மேற்பட்ட கருத்துப்பட்டறைகள், வேடிக்கை நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அரங்குகள், பைக் சாகச நிகழ்ச்சிகள், வாகன காண்காட்சிகள், ஹேக்கத்தான், கல்லூரியின் அனைத்து துறைகளின் சார்பாக துறை சார்ந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், வினாடி வினா, புராஜெக்ட் எக்ஸ்போ, பில்டிங் ஐடியா தான், நாடகம், இசை என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மொத்தம் 204 கல்லூரிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கே.பி.ஆர். இன்ஜினியரிங் தொழில்நுட்ப முதல்வர் அகிலா தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் அர்ஜூன் தாஸ், ஜோ படக்குழுவின் ரியோ ராஜ், மாளவிகா, பாவியா, ஜூவிந் ஜோனிக்ஸ், டி.ஜே.பாப், ஜோயல், லிபின்சன் சர்ச்சில், மார்செல், டி.ஜே.ப்ளாக், ஸ்ரீநிதி வினைதா, குதூகல் படப் புகழ் பாலமுருகன், ஊர்க்குருவி பருந்தாகும் பட குழுவினர்கள் ரஞ்சித் உன்னி, கோடாங்கி வடிவேலு, காய்திரி ஐயர், விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலகின் வறுமையை ஒழிக்கவும் நமது பூமியை காக்கவும் நிலையான வளர்ச்சி இலக்குகள் என ஐநா சபையால் 2015-ம் ஆண்டு 17 இலக்குகள் வகுக்கப்பட்டன.
இவற்றை விளக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த அரங்கு அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களுடன் உரையாடி எல்லோரையும் உற்சாகப்படுத்தினார் நடிகர் அர்ஜூன்தாஸ்.
போட்டிகளில் வென்றோருக்கு மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வர் கீதா, இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.