Homeபிற செய்திகள்புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

கோவை சவுரிபாளையத்தில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு கொடியேற்ற விழா நடைபெற்றது. கொடியினை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் ஏற்றி வைத்தார். இதில் சவுரிபாளையம் பங்கு தந்தை ஜான் ரோசரியோ, உதவி பங்கு தந்தை அருள் இருதயராஜ் மற்றும் பங்கு மக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினசரி மாலை நவநாள் நடைபெறும். வருகிற 7ம் தேதி காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் புது நன்மை உறுதி பூசுதல் ஆடம்பர திருப்பலி நடைபெறும். இரவு 8 மணிக்கு சிறப்பு பாடல் அலங்கார மின்விளக்கு தேர்பவனி நடக்கிறது. இந்த தகவலை ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img