fbpx
Homeபிற செய்திகள்மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறும் அனுமதி இவ்வாண்டும் தற்காலிகமாக தவிர்ப்பு பாதுகாப்பு கருதி மாவட்ட...

மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறும் அனுமதி இவ்வாண்டும் தற்காலிகமாக தவிர்ப்பு பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24.11.2025 அன்று கொடி யேற்றத்துடன் பக்தி பூர்வமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் அதிகாலை 03.12.2025 அன்று, அதே மாலை அருணாச்சல மலைச் சிகரத்தில் மகாதீபம் ஏற்றும் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு பெஞ்சால் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கடுமையான மழை, அதன் தொடர்ச்சியாக மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்பு களுக்கு வழிவகுத்தது. அப்போது மலைப் பாதைகளின் பாதுகாப்பு இல்லாமை காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படாமல் தடுக்கப்பட்டது.

தற்போது டிட்வா புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. மேலும் இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட நிபுணர் அறிக்கையின்படி, மலையேற்றப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத் தப்பட வில்லை என்பதோடு, தளர்வான கற்பாறைகள் பல இடங்களில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இந்த ஆண்டும் திருவிழா காலத்தில் மலை ஏறும் அனு மதி தற்காலிகமாக மறுக் கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் நிர்வாகத்துடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி மலையேறுவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அத்துடன், மலைப்பாதை சுற்றுவட்டாரங்களில் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் இணைப்பில் வலுப் படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்த சூழலிலும் மலை ஏற முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img