fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோவை மாவட்ட 6-வது மாநாடு

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோவை மாவட்ட 6-வது மாநாடு

கோவை திவ்யோதயா ஹாலில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோவை மாவட்ட 6-வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை பார் அசோசியேஷன் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு “அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விளக்கமாக பேசினார். அதேபோன்று இந்தக் கூட்டத்தில் மூத்த வழக் கறிஞர் மோகன் அரசியல் அமைப்புச் சட்டம் அதன் மாண்புகள் குறித்து பேசினார். இந்த கூட்டத்தில்வழக்கறிஞர்கள் நந்த குமார் ராமர் சுந்தரமூர்த்தி ராஜ் சிம்மன் அப்துல் லத்தீப்சிவகுமார் உள்பட 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மாத உதவித்தொகை ரூ 5000 ஆக உயர்த்திவழங்க வேண்டும், உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்பன உள்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் ஜான்சி நன்றி கூறினார். கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img