சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென் னையை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் ஸ்கூலில் யோகா தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர் 650 பேர் யோகா செய்து காட்டினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய யோகாசனம் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைச் செயலாளர் முனைவர் ஜெயந்தி, யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், நினைவு ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறி யோகாசனம், பிரணா யம் உள்ளிட்டவை செய்து காட்டினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ஆர். ராஜ்குமார், முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.