கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர். ச.மாதவி தலைமையில் யோகா தின விழா நடந்தது. யோகாசனத்தின் சிறப்புகளை முதல்வர் மாதவி எடுத் துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் டபிள் யுசிஎஸ்சி ஆர் அண்ட் டி, துணைத் தலைவர் சீனியர் பேராசிரியர் டாக்டர் எம்.வி. ரபிந்தரனாத் பேசும்போது,
யோகாவின் முக்கியத் துவத்தை பற்றியும், யோகாவின் மகத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
செவிலியர் மாணவிகள் யோகாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.
கே.எம்ச்.எச். செவிலியர் கல் லூரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு இளநிலை செவிலியர் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தனுராசனம், பத்மாசனம், புஜங்காசனம், சூரிய நமஸ்காரம் ஆகிய யோகாசனங்களை செய்முறை வடிவில் அரங்கேற்றினர்.