ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்ஆர்இசி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஆகியவை ஒருங்கிணைந்து எஸ் ஆர் இ சி ஸ்பார்க் தெரைவ் பிட்ச் முதல் பதிப்பு என்ற தலைப்பில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் பூட்கேம்ப் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஊரக மாற்றத்திட்டத்தின் தொழில் வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வன் மற்றும் ஸ்டார்ட்அப்களின் திட்ட இணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில், 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர்.
நிறைவு விழாவில், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் துணைத் தலைவர் தினேஷ் சுந்தரவேலு கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு
பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் அலமேலு, முதல்வர் சௌந்தர்ராஜன், கல்லூரியின் தொழில்துறை தலைவர் கணேஷ், இன்குபேஷன் மேலாளர் திருக்குறள் கனி , பேராசிரியை ஷர்மிளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



