Homeபிற செய்திகள்டாக்டர் தவமணி தேவி பழனிசாமியை பாராட்டி எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கிய ஐசிடி அகாடமி

டாக்டர் தவமணி தேவி பழனிசாமியை பாராட்டி எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கிய ஐசிடி அகாடமி

டாக்டர் தவமணி பழனிசாமி கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணை தலைவராகவும் டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளராகவும் உள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு பல சாதனைகள் புரிந்து வரும் டாக்டர் தவமணி தேவி பழனிசாமியை பாராட்டி ஐசிடி அகாடமி அவருக்கு எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் என்ற விருதை வழங்கியுள்ளது.

இதனை கோவை லீ மெரியடினில் நடைபெற்ற நிகழ்வில் தவமணி தேவி பழனிசாமிக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

தொடர்ந்து தவமணி தேவி பழனிசாமி கூறுகையில்,

“இந்த விருது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய விருதுகள் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யவும், தூண்டு கோலாக அமையும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img