தீ இனிது இலக்கிய இயக்கம் மற்றும் களிறு வெளியீடு இணைந்து பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நூலறிமுக நிகழ்வை நடத்தியது.
நிகழ்வில் எட்டு வயது எழுத்தாளர் யோகேஸ்வரன் எழுதிய “கஜராஜன் கலீம் தாத்தா”, தாய்நதியின் “ஐந்திணைச் சொற்கள்” மற்றும் சாய் மீராவின் “நீலச்சிறகு” ஆகிய நூல்களுக்கான அறிமுக உரையினை ஜி.சிவக்குமார், கோகலியமூர்த்தி மற்றும் கருக்கல் சுரேஷ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் பாரதி மற்றும் பாரதிதாசன் கவிதைகளைப் பாடினர். நதிமலர் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.
யோகேஸ்வரன் “நொய்யல்.. ஆறும் ஆறாத ரணமும்“ என்கிற தனிநபர் நாடகத்தை நிகழ்த்தினார். இளவேனில் இளங்கோவன் மற்றும் பள்ளி மாணவியர் சிலம்பாட்டம் ஆடிக்காட்டினர். நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வரவேற்புரையை தீ இனிது அமைப்பின் கவிஞர் சோழநிலாவும், நன்றியுரையை பசுமைக்குரல் அமைப்பின் மகேந்திரனும் ஆற்றினர் கலை, இலக்கியங்களின் நோக்கம் படைப்பும் படைப்பாளிகளும் ஏன் கொண்டாடப்பட வேண்டும்.
நவீன காலச் சூழலிற்கு ஏற்ப புதிய படைப்புகள் படைக்கப்பட வேண்டியதன் அவசியம் என பல்வேறு தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.