தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகின்றது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
எனவே மழை பெய்ய வேண்டி மேட்டுப்பாளையத்தில் சிறப்பு தொழுகை நடத்த ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு முடிவு செய்தது.
இதை அடுத்து இன்று காலை ஊட்டி சாலையில் உள்ள ரோஸ் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது இந்த தொழுகையை சின்ன பள்ளிவாசல் இமாம் முகைதீன் சிராஜி தொழுகையை நடத்தி வைத்தார்.
இந்த தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.