நீரிழிவு சிக்கல்களை நிர்வகிப்பதற்கான சிறப்பு மையத்தை (COE-MDC) காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இந்த மையத்தை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்த அதிநவீன மையத்தில், நரம்பியல், இருதயவியல், சிறுநீரகவியல், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, பாத பராமரிப்பு, உணவுமுறை மற்றும் உடலியக்க நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிபுணர்களை ஒன்றிணைத்து, நீரிழிவு சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரிவான மற்றும் சிறப்பான பராமரிப்பை வழங்க உள்ளனர்.
இது குறித்து காவேரி மருத்துவ மனையின் மூத்த நீரிழிவு மருத்துவர் பரணீதரன் கூறுகையில், “நீரிழிவு நோய் ஒரு உறுப்பை மட்டும் பாதிக்காது, முழு உடலையும் பாதிக்கும். மேலும் அதன் சிக்கல்கள் வாழ்க்கைத் தரத்தை கணிசமாகக் குறைக்கும்.
காவேரி மருத்துவமனையில், இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை நாங்கள் உணர்கிறோம். எங்களின் சிறப்பு மையம், ஆரம்பகாலத்திலேயே தலையிட்டு, சிறப்பான சிகிச்சை மற்றும் நீண்டகால சேதத்தைத் தடுப்பதில் உரிய கவனம் செலுத்தும். மேலும் பலதரப்பட்ட, நிருபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப் படையிலான அணுகுமுறையை வழங் குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்“ என்றார்.
காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “பல்துறை நிபுணர்களின் அணுகுமுறை மற்றும் நோயாளிகளே முதன்மை என்ற தத்துவத்தை ஒருங்கிணைத்து அளிக்கப்படும் சிகிச்சையால் நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண்பதை இலக்காக கொண்டுள்ளோம்“ என்றார்.