யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் ‘எம்எஸ்எம்இ கனெக்ட்’ என்ற தலைப்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை வங்கியின் துணைப் பொது மேலாளர் எஸ்.எஸ்.லாவண்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்த படம். இதில் வங்கி அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர் திரளாக பங்கேற்றனர்.