சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடு நிலைப்பள்ளியில் “திருக்கு றளின் சிறப்பு மற்றும் தமிழின் பெருமை” என்னும் தலைப்பில் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயக்கொடி வரவேற்புரை ஆற்றனார்.
சிவசங்கர் திருக்குறளின் சிறப்பை எடுத்து கூற காலத்தால் முற்பட்டது, உலகின் முதல் மொழி, எக்காலத்திலும் அழியாத மொழி என தமிழின் பெருமைகளை ராகவேந்திரா கலைக்கல் லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கோ.கலைச் செல்வன் எடுத்துக் கூறி னார்.
திருக்குறள் போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சிதம்பரம் உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஞானபிரகாசம் மற்றும் ஆலோசகர் அரச கோவலன், பொருளாளர் ராமானுஜம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினர்.
நிறைவாக உ.த.க உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார். இவ்விழாவில் சிதம்பரம் உலக தமிழ் கழக உறுப்பினர்கள், வைத்திலிங்கம்,, ஹேமமாலினி, லெட்சுமிநாராயணன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.