fbpx
Homeபிற செய்திகள்குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் நடமாடும் கண்காட்சி

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் நடமாடும் கண்காட்சி

இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கவும், இந்திய விமானப்படையில் சேருவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்திய விமானப்படையின் நடமாடும் கண்காட்சி கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்தது.

நவீன வசதிகள் கொண்ட இந்த கண்காட்சி வாகனத்தை கோவையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி மாணவர்கள் நேரில் பார்த்து வியந்தனர். 

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகள் ஹெலிகாப்டர் பைலட்டாகப் பணியாற்றிய குரூப் கேப்டன் வி.சோமசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். 

குமரகுரு தொழில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின்  பாதுகாப்புத்திட்ட இயக்குநரான ரியர் அட்மிரல்வி. மோகன்தாஸ் (ஓய்வு)  விமானப்படை குறித்து இளைஞர்களிடையே பெருகி வரும் விழிப்புணர்வையும், அதனால் அதிகரித்துள்ள போட்டியையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் குரூப் கேப்டன் வி. சோமசுந்தர் மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி குரூப் கேப்டன் பினுகோஷி ஆகியோருடன் 

மாணவர்கள் கலந்துரையாடனர்.

படிக்க வேண்டும்

spot_img