fbpx
Homeபிற செய்திகள்அமிர்தவித்யாலயம் பள்ளியில் ‘திரிநேத்ரா’ ஆண்டு விழா

அமிர்தவித்யாலயம் பள்ளியில் ‘திரிநேத்ரா’ ஆண்டு விழா

கோவை காளப்பட்டி- அமிர்த வித்யாலயம் பள்ளியில் ‘திரிநேத்ரா’ என்ற மூன்றாம் ஆண்டு, ஆண்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “திரி நேத்ரா” என்னும் தலைப்பில் தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் மூவர்ணக்கொடியில் உள்ள நிறங்கள் (ஆரஞ்சு – தைரியம், தியாகம்; வெண்மை – அமைதி, உண்மை; பச்சை – நாட்டின்வளம்; அசோகசக்கரம் – தர்மம்) உணர்த்தும் கருத்துகளை, அனைவரையும் காக்கும் இறைவன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணுடன் ஒப்பிட்டு குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது அழகான நடனக்கலையை வெளிப்படுத்தினர்.

இளம்வயதிலேயே தேசிய ஒருமைப் பாட்டுடன் கடவுள் பக்தியையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகையில் இவ்விழா சிறப்புற அமைந்தது.
பள்ளி மேலாளர் சுவாமினி முக்த அமிர்தபிரானா ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

டாக்டர் அம்சாபசுபதி BNYS, FMC (Founder, CMO – Punarva Healthcare Centre) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


நளினிபிரியா (மழலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர்-அமிர்தவித்யாலயம்) கௌரவ விருந்தினராக பங்குபெற்று விழாவைச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மழலைச்செல்வங்களுக்கு பள்ளி முதல்வர் சரோஜா ராஜலிங்கம் பரிசுகளை வழங்கினார். விழாவின் இறுதியில் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் குழந்தைகள் வழங்கிய இறுதி நடன நிகழ்ச்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. சுமார் 1300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இந்த ஆண்டுவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img