fbpx
Homeபிற செய்திகள்சங்கரன்கோவிலில் 4 வழிச்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா

சங்கரன்கோவிலில் 4 வழிச்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலை தற்போது 4 வழி சாலை யாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலை யில் சென்டர் மீடியனில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 1000வது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார்.

சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், நீர்நிலைகள் பாது காப்பு அறக்கட்டளை செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், பொருளாளர் திவ்யா ரெங்கன், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் டிடிவி பிரேம்குமார் அனை வரையும் வரவேற்றார். இதில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட 150 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் டாக்டர்கள் வாசுகி நல்ல முத்துசாமி, கவிதா ரவிச்சந்திர பிர காஷ், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் திலகவதி, நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை துணை பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி சாந்தி செல்வகுமார் மற்றும் தன்னார்வலர்கள், சாலை பணி யாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img