fbpx
Homeபிற செய்திகள்சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் Women’s Wing of IMA தூத்துக்குடி கிளை, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை மற்றும் Dr. அருள் சர்க்கரை நோய் லைப் ஸ்டைல் – ஆராய்ச்சி மையம் இணைந்து ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தின. இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரோச் பூங்காவில் தொடங்கி வைத்தார்.

ஐஎம்ஏ தலைவர் டாக்டர். பூங்கோதை, செயலாளர் டாக்டர். சிவசைலம், பொருளாளர் டாக்டர். ஆரத்தி கண்ணன், முன்னாள் தலைவர் டாக்டர். மாரிமுத்து, சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். அருள் பிரகாஷ், மகளிர் மகப்பேறு நிபுணர் டாக்டர். பெத்துக்கனி, நரம்பியல் நிபுணர் டாக்டர். கண்ணன், டாக்டர் சந்திரசேகர், டாக்டர். தனுஷ்கோடி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img