சென்னையில் ரேலா மருத்துவமனை சார்பில் கம்ப ராமாயணத்திலிருந்து கவிதை வரிகளை வாசித்தல், அவை குறித்து ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் மற்றும் தேர்வு செய்த பாடல் வரிகளை இசை வடிவில் வாய்ப் பாட்டாக வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
புரொஃபசர் முகமது ரேலா மற்றும் டாக்டர். பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் கம்ப ராமாயண பாடல் வரிகளை தமிழில் வாசித்து அவைகளுக்கான பொருள் விளக்கத்தை ஆங்கில மொழியில் வழங்கினர்.
அந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில் இசைப்பாடலாக பல்வேறு ராகங்களில் சிக்கில் குரு சரண் வழங்கினார். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் 14 பாடல்கள் இடம்பெற்றன.