fbpx
Homeபிற செய்திகள்சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகுவள் ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார்.

விழாவில் தலைமை விருந்தினராக பெங்களூர் டோரி ஹாரிஸ் நிறுவனத்தின் விநியோக தலைவர் நிரஞ்சன தேவி, கௌரவ விருந்தினர்களாக சோனா கல்லூரியின் முன்னாள் மாணவர்களான சென்னை கேப்ஜெமினி நிறுவனத்தின் வன்பொருள் வடிவமைப்பு இயக்குனர் கேசவன் மற்றும் புது டெல்லி லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

துறைத்தலைவர் மற்றும் அட்மிஷன் டீன் சத்தியபாமா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில் குமார், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளிய ப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராள மான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திரு ப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

பின்னர் தலைமை விருந்தினர் நிரஞ்சன தேவி, பேசும் பொழுது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க வேண்டுமென்றும் இதற்கு தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் மிக அவசியம் என்றார்.

சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா பேசும் பொழுது, வாழ்வின் முக்கியத்தருணமான இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், பல்வேறு கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது பற்றி கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நவாஷ், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை துறைத் தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எம்.பி.ஏ துறைத்தலைவர் அஞ்சனி நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img