Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவரி மாற்றம் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டடி அனு மதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பெரியசாமி இதுவரை மாநகராட்சி பகுதி யில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூரி பள்ளி மருத்துவமனை கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த பணி நடைபெறுகிறது. இங்கு சாலை. கால்வாய் போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு மேற்கொண்டு அது படிப்படியாக நிறைவேற்றப்படும்.

முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முழுமையாக ஒருபுறம் 300 மீட்டரும் மறுபுரம் 180 மீட்டரும் அகலம் கொண்டதாகும் அதை முழுமையாக சீரமைத்து மழை காலங்களில் வரும் தேவையற்ற நீரை கடலுக்குள் செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. அப்பகுதியில் மணல் அரிப்பை தடுப்பதற்கு மரங்கள் நடுவதும் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

அத்திரமரப் பட்டி முள்ளக்காடு பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையடுத்து ஜேஎஸ் நகரில் ஒரு பூங்கா வரவுள்ளது. அதே போல் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் அதற்கான தேர்வு பணிகள் நடைபெறுகிறது. இந்த பகுதியில் தேவையற்ற இடங்கள் ஏதுவும் இருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் தனியார் வசம் ஆக்கிரமித்து வைத்து இருந்த 40 கோடி மதிப்பிலான இடம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 153 மனுக்களில் 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கட்டிட அனுதிக்கென்று கொடுக்கப்பட்ட 22 மனுக்களில் 9 மனுக்களுக்கு மட்டும் தீர்வு காணப்படாத நிலை யுள்ளது. அதற்கு தகுந்த ஆவணங்களை முறையாக இணைத்து வழங்கினார்.

அதை முறைப்படுத்தி முறையாக வழங்கப்படும் எந்த பணிகளுக்கும் ரசீது இல்லாமல் யரிடமும் எதுவும் கொடுக்க வேண்டாம். வீடு கட்டும் போது குடிநீர் இணைப்புகும் விண்ணப்பித்து உடனடியாக இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பணிகளும் நேர்மையாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு 15 நிமிடத்தில் அச்சான்றிதழை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். மற்றொரு பெண் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டார். இருவரும் மனமகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் இணையார் ராஜா ராம், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் கல்யாணசுந் தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சி ராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜய குமார், வட்டச்செயலாளர்கள் நடேசன் டேனியல், பிரசாந்த், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராபின், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img