மேட்டுப்பாளையம் வடக்கு, தெற்கு நகரக்கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹக்கீம், நகர செயலாளர்கள் முனுசாமி,முகமது யூனூஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்.அனைவரும் இணக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும்,நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், மேட் டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட நகர, கிளைக்கழக நிர்வாகிகள், பாக முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.