மேட்டூர் மற்றும் மேச்சேரியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேச்சேரி ஒன்றியத்தில் புக்கம்பட்டி ஊராட்சி, அரங்கனூர் ஊராட்சி, ஓலைப்பட்டி ஊராட்சி, கொப்பம்பட்டி ஊராட்சி, மல்லி குந்தம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்தார்.
கவுன்சிலர்கள் ரங்கசாமி, கொடியரசி கீதா, அனிதா ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.