fbpx
Homeபிற செய்திகள்‘குடியிருப்பு கட்டிடக் கட்டுமானத் திட்டம்’ மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

‘குடியிருப்பு கட்டிடக் கட்டுமானத் திட்டம்’ மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

கிரெடாய் சென்னை மற்றும் இந்திய கான்கிரீட் நிறுவனத்தின் சென்னை மையம் ஆகியவை இணைந்து சிவில் என்ஜினியரிங் மாணவர்களை அவர்களது துறையில் சிறந்த தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் ‘குடியிருப்பு கட்டிடக் கட்டுமானத் திட்டம்’ என்னும் திட்டத்தை சமீபத்தில் சென் னையில் துவக்கியது.

இந்த திட்டத்தில் முதல் பேட்ஜ்ஜில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 25 பொறி யியல் மாணவர்கள் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென் னையில் நடைபெற்றது.

நிறைவு விழாவில் கிரெடாய் சென்னையின் தலைவர் எஸ்.சிவ குருநாதன், இந்திய கான்கிரீட் நிறுவனத்தின், சென்னை மையத் தலைவர் முரளிதரன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் வழி காட்டுதல்களோடு தங்களின் அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இதில் கிரெடாய் சென்னை திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் ஆர். ஜெயகுமார், திறன் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருள் ஆகியோர் ஆர்வமிக்க மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதோடு, சிவில் துறை சார்ந்த பல்வேறு தொழில் நுட்பங்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இந்திய கான்கிரீட் நிறுவனத்தின், சென்னை மையத் தலைவர் முரளிதரன் மற்றும்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை சூப்பிரெண்ட் என்ஜினியர் கல்யாண சுந்தரம் ஆகியோர் மாணவர்களிடம் பேசினர். அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img