இதுவரை கண்டிராத நிதி நெருக்கடியை ஜவுளித் தொழில் சந்தித்து வருகிறது. இடைக்கால நிதி நிவாரணம் வழங்க அரசுக்கு இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு மற்றும் சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர், ரவி சாம் ஆகியோர் கூறியதாவது:
ஜவுளி மற்றும் ஆடைத் தொழி லில் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையே லாபம் கிடைப்பது வழக்கம். ஆனால், தற்போது இந்த துறையினர் 5 முதல் 10 சதவீதம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜவுளித் தொழிலுக்கு போர்கால அடிப்படையில் இடைக்கால நிதி நிவாரணம் தேவைப்படுகிறது.
அவ்வாறு இடைக்கால நிதி நிவாரணம் கிடைக்காவிட்டால் சிறு, நடுத்தர, குறு வகை நூற்பாலைகள் செயல்படாத சொத்தாக மாறும் நிலை ஏற்படும். இதனால் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
நாட்டிலுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான ஜவுளி ஆலைகள் சிறு, நடுத்தர, குறு வகை நூற்பாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மின் கட்டணத்தில் சில நிவார ணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுக ளுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை துரிதப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், அதன் மூலம் 8 முதல் 26 சதவீ தம் வரை வரி ஏற்றுமதியை தவிர்த்து ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை அதி கரிப்பது போன்ற மத்திய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன.
தமிழக அரசும் தொழில் கொள்கை மற்றும் சிறு, நடுத்தர, குறு வகை தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ள சிறப்பு திட்டங்கள் பாராட்டுக்குரியவை.
பல்வேறு நாடுகளுடனான வரியில்லா ஒப்பந்தத்தின் உண் மையான பலன்களை 2024-ம் ஆண்டில் மட்டுமே அறுவடை செய்ய முடியும். மத்திய, மாநில அரசுகளின் எந்த நிவாரணமும் இன்றி ஜவுளி ஆலைகள் நிலைக்க முடியாது. பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்
தரக்கட்டுப்பாட்டு ஆணை களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல் களை நீக்கி செயற்கை இழைகளை பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்து தொழிலில் சமத ளம் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அதிக பட்சமாக நிலைக்கட்டணம் 20 சதவீதம் வரையும் அல்லது பதி வாகும் மின் அளவுக்கு மட்டும் வசூலிக்க வேண்டும்.
குறைவு அழுத்த தொழிற் சாலைகளுக்கு பல்வேறு பளுவிற்கு ஏற்றவாறு முறையே ரூ.75, ரூ.150 மற்றும் ரூ.550 என்று நிலைக்கட்டணம் வசூலிப்பதை தற் காலிகமாக தவிர்க்க வேண்டும்.
குறைவு அழுத்த தொழிற்சாலை களுக்கு வசூலிக்கப்படும் அதிக பட்ச நுகர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து நிதி சார்ந்த நிறுவனங்களும் தொழில்துறையினருக்கு வேண்டிய உதவிகளை நல்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ஏற்கனவே ஒரு மனுவை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



