சேலம் சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியின் மூலம் ரூ.47.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை “மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல்களின் படி சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் விவசாயி கள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2.96 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொது நகைக்கடன் ரூ.47.30 கோடியும், மகளிர் சுய உதவி குழு கடன் ரூ.13.88 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை பெறும் பயனா ளிகள் உரிய முறையில் இதனை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கெ £ள்கிறேன். இவ்வாறு அவர் கூறினர்.
கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் கடனுதவி பெற்று பயனடைந்து வரும் மின்னாம்பள்ளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மஞ்சுளா கூறியதாவது:
எங்கள் பகுதியைச் சார்ந்த 20 பெண்கள் சேர்ந்து மின்னாம்பள்ளி மகளிர் சுய உதவிக்குழுவினை கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஆரம்பித்து சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தில் தொடர்ந்து கடனுதவி பெற்று வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 லட்சம் கடனுதவி பெற்று காய்கறி அங்காடி தொடங்கி நடத்தி வருகிறோம். பெறப்பட்ட கடன் தொகையினை மாதத் தவணையாக காய்கறி அங்காடியிலிருந்து வரும் வருமானத்தை வைத்து முறையாக திருப்பி செலுத்தினோம்.
தற்பொழுது இக்காய் காறி அங்காடி யினை மேலும் விரிவுபடுத்திடும் வகையில் கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்தோம். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களது விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தற்பொழுது எங்களுக்கு ரூ.19 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமை ச்சருக்கு நிறைந்த மனதோடு எங்களது சுய உதவிக்குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சுய உதவிக்குழு உறுப்பினர் சத்தியபிரியா கூறியதாவது:
நான் மற்றும் எங்கள் பகுதியில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள 12 பெண்கள் சேர்ந்து மாரியம்மன் மகளிர் சுய உதவிக்குழுவினை தொடங்கி சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தில் தொடர்ந்து கடனுதவி பெற்று வருகிறோம்.
கடந்த ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கடனுதவி பெற்று சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடையினை தொடங்கி நடத்தி வருகிறோம். பழைய கடனை முழுவதும் திருப்பி செலுத்தி விட்டோம்.
தற்பொழுது கூடுதலாக சிகை அலங்கார நிலையம் அமைத்திட ரூ.12 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளனர். முதலமைச்சருக்கு மன நிறைவோடு நன்றி இவ்வாறு அவர் கூறினார்.
இந்த “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்கு மார். சரக துணைப் பதிவா ளர் முத்துவிஜயா மற்றும் கூட்டுற வுத்துறை அலுவல ர்கள் உடனிருந்தனர்.