fbpx
Homeபிற செய்திகள்தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரம்

தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரம்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்.6 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவிலில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணியை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

பணிகள் விறுவிறுப்பாக துவங்கிய நிலையில் கல்காரம் அமைக்கும் பணி கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. அதனையொட்டி செங்கல் கோபுர கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான மூலப்பொருட்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்த நிலையில் தொடர்ந்து ஆடி மாத குண்டம் திருவிழா நிகழ்ச்சியும் வந்ததால் பணிகள் நடைபெறாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து திருவிழா முடிந்து முன்னிலையில் அளவீடுகள் குறிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கின. ராஜகோபுரம் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் ரேவதி மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், திருக்கோயில் தக்கார் மேனகா மற்றும் செயல் அலுவலரும்,உதவி ஆணை யருமான கைலாசமூர்த்தி கட்டுமானப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வனபத்ரகாளியம்மன் கோயிலின் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி கூறுகையில் தற்போது செங்கல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வருட காலத்தில் பணிகள் முடிவுற்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img